யார் யாரை விமர்சிப்பது ஹர்பஜன் சிங் பாய்ச்சல்!!

380

harbajan

இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிக்க கடுமையாக உழைப்பேன் என்று அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த மினி உலக கிண்ண தொடர் மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்ட ஹர்ஜன் சிங் அடுத்து சிம்பாபே அணியுடன் நடக்கவுள்ள தொடருக்கும் தேர்வு செய்யப்படவில்லை.

அதிரடி தொடக்க வீரர்கள் சேவக், கம்பீர், வேகப் பந்துவீச்சாளர் ஜகீர் கான் ஆகியோரும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் அனுபவ வீரர்கள் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கான வாய்ப்பு வெகுவாகக் குறைந்து வருகிறது.

இந்த நிலையில் இது குறித்து ஹர்பஜன் சிங் நேற்று கூறியதாவது..

அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு கடுமையாகப் பயிற்சி செய்ய உள்ளேன். மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவதற்காக உழைப்பேன். தொடர்ச்சியாக பல போட்டிகள் நடக்க உள்ளன. ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாகவே விளையாடினேன். அந்த தொடரில் நான் 24 விக்கெட் வீழ்த்தியதுடன் மும்பை இந்தியன்ஸ் சம்பியன் பட்டம் வென்றதுதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இனி தேர்வுக் குழுவினர்தான் எனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும்.

எனினும் அடுத்து வரும் உள்ளூர் போட்டிகள் மற்றும் சம்பியன்ஸ் லீக் டி20 தொடரிலும் விளையாடி திறமையை நிரூபிப்பேன். ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடியவர்கள் 100 போட்டிக்கு மேல் விளையாடிய அனுபவ வீரர்களை பற்றி விமர்சிக்க கூடாது.

தற்போதுள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து ஆடுகின்றனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடுவது முக்கியம். இவ்வாறு ஹர்பஜன் கூறியுள்ளார்.