அவுஸ்ரேலியாவில் நேற்றிரவு நடந்த கைகலப்பு கத்திக் குத்தாக மாறி நிலையில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிட்னி வென்வர்த்துவில் என்னும் இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை நேற்று அதிக மதுபோதையில் வாகனத்தை செலுத்திய நிலையில், வாகனம் வேக கட்டுப்பாடை இழந்து வீட்டுக்குள் புகுந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தமிழர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வீடு முற்றாக சேதமடைந்துள்ளது.






