சிறுவர்களுக்கு ஆபாசப் படங்களை காண்பித்த நபர் கைது!!

745

jail

கண்டி – அலவத்துகொடை பகுதியில் இரண்டு சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆபாசப் படங்களை காண்பித்த 53 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரின் வீட்டிலிருந்து பல ஆபாச இருவெட்டுக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.