அவுஸ்திரேலியா வின் மிகவும் பலமான நபராக 33 வயதான தரென் லாங் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
தென் மேற்கு சிட்னியிலுள்ள கம்டென் நகரைச் சேர்ந்த அவர் இந்த வருடம் நோர்வேயில் இடம்பெறவுள்ள உலகின் பலமான மனிதனை தெரிவு செய்வதற்கான போட்டியில் அவு ஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்துகொள்ளவுள்ளார். மேற்படி போட்டியில் அவுஸ்திரேலியா பங்கேற்பது இதுவே முதல் தடவையாகும்.
லாங். 300 கிலோகிராம் நிறையை தூக்கியதன் மூலம் மேற்படி அவுஸ்திரேலியா வின் மிகவும் பலமான நபர் என்ற பெய ரைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.






