டி.ஆர்.எஸ் முறையால் பயனில்லை கில்கிறிஸ்ட் கிளப்பும் புதிய சர்ச்சை!!

418

gilly.cms

இங்கிலாந்து அவுஸ்திரேலியா அணிகள் இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.
நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 14 ஓட்டங்களில் வெற்றி பெற்றது.

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறை (டி.ஆர்.எஸ்) அமல் படுத்தப்பட்டுள்ளது. நாட்டிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் டி.ஆர்.எஸ். முறையில் சர்ச்சை ஏற்பட்டது.

இங்கிலாந்து வீரர் டிராட்டுக்கு டி.ஆர்.எஸ். முறையில் கொடுக்கப்பட்ட ஆடமிழப்பு மற்றும் ஆடமிழப்பு என்று நன்றாக தெரிந்தும் ஸ்டூவர்ட் பிராட் ஆடுகளத்தை விட்டு செல்ல மறுத்தது ஆகியவற்றின் காரணமாக இந்த டெஸ்ட் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டி.ஆர்.எஸ். முறையால் எந்த தீர்வும் ஏற்பட போவதில்லை என்று அவுஸ்திரேலிய முன்னாள் விக்கெட் காப்பாளர் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் டி.ஆர்.எஸ். முறை பயன்படுத்தியது சரியானதாக தெரியவில்லை. சில பிரச்சினைகள் சரி செய்யப்படலாம்.

ஆனால் ஓட்டு மொத்த தீர்வாக இல்லை என்றும் டி.ஆர்.எஸ். முறையில் உள்ள குறைபாடுகளால் தான் இந்திய சபை அதை ஏற்க தயங்குகிறது என்பதை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது எனவும் கூறினார்.