
இங்கிலாந்தின் பயிற்சியாளர் குழாமில் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன ஆலோசனையாளராக இணைந்து கொள்ள வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2014ஆம் ஆண்டு இருபது- ஓவர் உலகக்கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கையணிக்கு பயிற்சியாளராக விருந்த தற்போதைய இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் போல் பப்ரி
காஸ் ஏற்கனவே மஹேலவுடன் பேசியதாகவும், ஆனால் இங்கிலாந்து அணியின் இயக்குனர் அன்ரூ ஸ்ராஸ் இன்னும் எந்தவொரு ஒப்பந்தத்துக்கும் இணங்க வில்லையென் றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான ட்ரேவர் பெய்லிஸும், இலங்கையணிக்கு பயிற்சியாளராகவிருந்த சமயம் மஹே லவுக்கு பரிச்சயமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
18 வருடங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ள மஹேல துடுப்பாட்டவீரராக பல சாதனைகளை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆசிய ஆடுகளங்கள் பற்றிய அறிவை இவர்கொண்டிருப்பதால், அடுத்துவரும் 18 மாதங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தியா, பங்களாதேஷ் அணிகளுக் கெதிராக விளையாடவுள்ளன
இங்கிலாந்து அணிக்கு இவர் உதவியாக இருப்பார் என எதிர் பார்க்கப்படுகிறது. ஜெயவர்த்தனவுடன் தொடர்பு கொண்டதை உறுதிப்படுத்தியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பேச்சாளர்.





