இந்திய சினிமாவையே புரட்டிப் போட்ட பாகுபலி : வசூலில் சாதனை மேல் சாதனை!!

456

Bahubali

தென்னிந்திய சினிமா தற்போது ஹொலிவுட் சினிமாக்களையே வசூலில் ஓரம் கட்டும் நேரம் வந்துவிட்டது. அந்த வகையில் கடந்த வாரம் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி இதுவரை வந்த அனைத்து படத்தின் சாதனைகளையும் தகர்த்துள்ளது.

சமீபத்தில் வந்த தகவலின் படி இப்படம் வெளிவந்த 3 நாட்களில் 165 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.மேலும், 2 நாட்களில் 100 கோடி வசூல் செய்து, குறைந்த நாட்களில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது.