காக்கா முட்டையின் அடுத்த படைப்பு!!

239

Kakkamuttai

தமிழ் சினிமா ரசிகர்கள் எப்போதும் தரமான படைப்பை வரவேற்பார்கள் என்பதற்கு காக்கா முட்டை ஒரு உதாரணம். இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் அடுத்து என்ன படம் இயக்குவார் என அனைவரும் ஆவலுடன் இருக்கின்றனர்.

சமீபத்தில் வந்த தகவலின் படி காக்கா முட்டை படம் வருவதற்கு முன்பே, மணிகண்டன், விதார்த்தின் நடிப்பில் குற்றமே தண்டனை என்ற படத்தை இயக்கி முடித்து விட்டாராம்.

இப்படத்திற்கான இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகின்றது. இதைத் தொடர்ந்து கிரமாத்திலிருந்து நகரத்திற்கு வரும் இளைஞர்கள் பற்றி ஒரு கதையை இயக்குவதாக உள்ளாராம்.