படிக்கும் மாணவர்களின் பகுதி நேர வேலைக்கு தடை : அதிரடி சட்டத்தை அமுல்படுத்தும் பிரித்தானியா!!

257

International_Students

பிரித்தானியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பகுதி நேர பணிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் தங்கியிருந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் வாரத்திற்கு 10 மணி நேரம் பகுதி நேர ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர்.

தற்போது இதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது, ஏனெனில் இச்சலுகையை பயன்படுத்தி குடியுரிமை குற்றத்தில் ஈடுபடுபவர்கள் பிரித்தானியாவில் உள்ள வேலை வாய்ப்புகளை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகிறார்கள்.

அதை ஏராளமானவர்கள் வாங்கி பயன்பெறுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளதையடுத்து இந்த தடை கொண்டுவரப்பட்டுள்ளது. இத் தடை உத்தரவு வருகின்ற ஓகஸ்ட் மாதம் நடைமுறைக்கு வரவுள்ளது,

இந்தத் தடை உத்தரவு ஐரோப்பிய நாடுகளை சேராத ஏனைய நாட்டினருக்கு மட்டும் விதிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய குடியுரிமை அமைச்சர் ஜேம்ஸ் புரோகன்ஷிர் கூறியுள்ளார்.

மேலும இதுகுறித்து அவர் கூறியதாவது, பிரித்தானியாவிற்கு கல்வி பயில விசாவில் வருபவர்கள் படித்து முடித்த பிறகு மீண்டும் தங்குவதற்கு விசா மறுக்கப்படுகிறது.

மேலும், மாணவர்களுக்கு ஆங்கில மொழி தேர்வு, ஸ்பொன்ஷர் ஷிப் வழங்கும் கல்லூரிகளின் உரிமம் போன்றவை சோதனை செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.