2வது குழந்தைக்கு அனுமதி கேட்டு 15 இலட்சம் மனுக்கள்!!

268

Chines

சனத் தொகையில் உலகின் மிகப்பெரிய நாடாக விளங்கும் சீனாவில், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ள தடை விதித்து சட்டம் கொண்டு வரப்பட்டது.

இதில் கடந்த ஆண்டில் சில மாற்றங்களை செய்து தம்பதியரில் யாரும் தனியாக பிறந்தவர்களாக இருந்தால் (குடும்பத்தின் ஒரே வாரிசு) அவர்கள் அரசிடம் மனு செய்து இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என அந்த சட்டம் தளர்த்தப்பட்டது.

இதையடுத்து, கடந்த மே மாத நிலவரப்படி இரண்டாவது குழந்தையை பெற்றுக் கொள்ள அனுமதி கேட்டு நாடு முழுவதிலும் இருந்து சுமார் 15 இலட்சம் பேர் சீன அரசின் குடும்ப கட்டுப்பாட்டு துறைக்கு மனு செய்துள்ளனர்.

இதில், சீனாவின் தலைநகரான பீஜிங்கை சேர்ந்த 42 ஆயிரத்து 75 தம்பதியர் மனு செய்ததாகவும், இதில் 38 ஆயிரத்து 798 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டதாகவும் சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.