வவுனியா பொது வைத்தியசாலையில் 24.5.2015 அன்று றொட்டறிக் கழகத்தினால் இலவச கண் பரிசோதனை நடாத்தப்பட்டு இன்று (15.07.2015) காலை 10.30 மணிக்கு வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் இலவச கண்ணாடி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந் நிகழ்வில் ஆர்.ரி.என். மயூரதாசன் (பொது சுகாதார வைத்திய உத்தியோகத்தர்) க.உதயராசா (பிரதேச செயலாளர் – வவுனியா), வவுனியா மாவட்ட றொட்டறிக் கழகத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-






