வவுனியா பிரதேச செயலகத்தினால் ஆடிப்பிறப்பினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட கலை, இலக்கியப் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளதாக பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பணிப்பிலும் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையிலும் வவுனியா பிரதேச செயலகத்தால் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை மற்றும் மாணவர்களின் பெயர் விபரம் வருமாறு..
பேச்சுப் போட்டியில் முதலாம் இடத்தினை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் சி.கிரிவாசனும் இரண்டாம் இடத்தினை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி கு.குலவிழி மற்றும் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவி ஜெ.ரிக்க்ஷிகா ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
கவிதைப் பாடல் போட்டியில் முதலாம் இடத்தை வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவி சி.சுலக்சிகாவும் இரண்டாம் இடத்தினை வவுனியா ஓமந்தை மத்திய கல்லுரி மாணவி தே.டீலானி, வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி ம.துவர்ணியா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தனிப்பாடல் போட்டி முதலாம் இடத்தினை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி இ.துஸ்யத்தியும் இரண்டாம் இடத்தினை வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி த.சுபர்ணாவும் மூன்றாம் இடத்தினை வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவி ம.புஸ்பகுமாரியும் பெற்றுக் கொண்டனார்.
கட்டுரைப் போட்டியில் முதலாம் இடத்தை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி கி.தர்ஷாவும், இரண்டாம் இடத்தினை வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி மாணவி சு.கிருபாலினியும், மூன்றாம் இடத்தினை வவுனியா விபுலானந்தா கல்லூரி மாணவி ஜெ.சதுர்ஷிகா ஆகியோரும் பெற்றுக் கொண்டனர்.
-பிராந்திய செய்தியாளர்-