விமான விபத்தில் அதிசயிக்கத்தக்க வகையில் உயிர்தப்பிய 16 வயதுச் சிறுமி!!

248

Fli

அமெ­ரிக்க வொஷிங்­ட­னி­லுள்ள மலைப் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற விமான விபத்­தொன்றில் 16 வயது சிறு­மி­யொ­ருவர் அதி­ச­யிக்­கத்­தக்க வகையில் உயிர் பிழைத்­துள்ளார்.

தனது தாத்தா மற்றும் பாட்டி முறை­யா­ன­வர்­க­ளுடன் சிறிய ரக விமா­ன­மொன்றில் அடம்ன் வியட்ச் என்ற மேற்­படி சிறுமி பய­ணித்த போதே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.

இந்த விபத்­தை­ய­டுத்து பள்­ளத்தில் விழுந்த விமான சிதை­வு­க­ளி­லி­ருந்து வெளி­யே­றிய அடம்ன் வியட்ச், ஒரு­வாறு மேலே ஏறி­வந்­துள்ளார்.

அவ­ருக்கு உயி­ரா­பத்­தான காயங்கள் எதுவும் ஏற்­ப­ட­வில்லை என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
அவ­ருடன் பய­ணித்த அவ­ரது தாத்தா மற்றும் பாட்டிக்கு என்ன நடந்தது என்பது அறியப்படவில்லை.