அஜித்தை அவமானப்படுத்தினாரா திரிஷா?

476

Ajith

அஜித்தை எப்படி த்ரிஷா வேலைவாங்கலாம் என்று தான் தற்போது அஜித் ரசிகர்கள் கொதித்து போய் வருகின்றனர்.

ஆனால் இந்த விஷயம் இப்போ நடந்தது அல்ல, கிரிடம் படத்தின் படப்பிடிப்பின் போது நடந்தது. கிரிடம் படத்தில் ஏரிக்குள் ஒரு பாடலை படமாக்கியுள்ளனர். அப்போது ஒவ்வொரு காட்சிக்குப் பின்னரும் த்ரிஷா உதவியாளர் ஏரிக்குள் நடந்துவந்து அவருக்கு உதவி விட்டு பின் அடுத்த காட்சி தயாராகும் வரை அங்கேயே த்ரிஷாவுக்கு குடை பிடித்து கொண்டிருந்தாராம்.

இதுபோல் ஒவ்வொரு காட்சிக்கும் அவர் வந்து போவதால் மொத்த படக்குழுவினரும் அவருக்காக காத்திருக்க நேர்ந்ததாம்.இதனை பார்த்த அஜித், அந்த உதவியாளரிடம் இருந்த குடை மற்றும் டச்சப் பொருட்களை வாங்கிக் கொண்டு அவரை அனுப்பிவிட்டு, தானே த்ரிஷாவுக்கு குடை பிடித்திருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த த்ரிஷா நீங்க ஏன் பிடிக்கிறீர்கள் என்று கேட்க, அஜித் உதவியாளர் வந்து போவதால் மொத்த படக்குழுவும் காத்துக் கொண்டிருக்கிறது, எனக்கு இதில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்றாராம்.

அதைக்கண்டு மொத்த படக்குழுவும் த்ரிஷாவை முறைக்க எனக்கு குடையே வேண்டாம் என்று கூறிவிட்டாராம் த்ரிஷா.