பாகுபலி திரைப்படம் முதல் 5 நாளில் 215 கோடி வசூலித்து சாதனை!!

449

Bahubali

பாகுபலி திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் உலகம் முழுவதும் 4 ஆயிரம் திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படம் வெளியான முதல் நாளிலேயே 76 கோடி வசூலித்தது. ஐந்து நாட்களில் 215 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. இப் படத்தை 250 கோடி செலவில் எடுத்து இருந்தனர்.

பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா போன்றோர் நடித்துள்ளனர். ராஜமௌலி இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகி இருக்கிறது.