வவுனியாவில் தேர்தல் சுவரொட்டி ஒட்டிய ஐவர் கைது!!

671

Arrest1

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஐவர் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தபோது இன்று (17.07.2015) அதிகாலை 2.00 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது..

சட்டவிரோத தேர்தல் செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்குடன் அதிகாலை 2.00 மணியளவில் ரோந்து சென்ற பொலிஸ் குழுவினரால் வவுனியா வேப்பங்குளம் சந்தியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவரின் தேர்தல் தொடர்பான சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் வாகனம் போன்றன கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.

இக்கைது நடவடிக்கையில் பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஜெயப்பிரகாஸ் (36508), சுகத்சிறி (46800), சாந்த (59595), சம்பத் (33821), அடங்கிய பொலிஸ் குழுவினரே கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிராந்திய செய்தியாளர்-