மதிப்புமிக்க நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த கனடா!!

279

Canada

சர்வதேச அளவில் மதிப்பு மிக்க நாடுகளில் பட்டியலில் கனடா முதலிடம் பிடித்துள்ளது. சர்வதேச நாடுகளின் மதிப்பு குறித்து ஆய்வு செய்யும் ஒரு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வை நடத்தியது.

55 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது, அந்த நாடுகளில் ஆட்சி செய்யும் அரசுகள், பொருளாதார நிலை மற்றும் சுற்றுச்சூழல் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் சர்வதேச அளவில் மதிப்பு மிக்க நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம் வகிக்கிறது, தொடர்ந்து நேர்வேவே 2வது இடத்திலும், சுவீடன் 3வது இடத்திலும், சுவிஸ்லாந்து 4வது இடத்திலும், அவுஸ்திரேலியா 5வது இடத்திலும் மதிப்பு மிக்க நாடுகளாக உள்ளன.

இந்த கருத்துக்கணிப்பில் 48 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.