வவுனியா அரச சுற்றுலா விடுதியில்கடந்த 15.07.2015 அன்று வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் முன்னர் பொருளாதார அமைச்சின் கீழ் பணியாற்றிய CRP உத்தியோகத்தர்களை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வாணிப அமைச்சருமாகிய ரிசாத் பதியுதீன் அவர்கள் விரைவில் புதிய பாராளுமன்றம் அமைந்த பின்னர் வன்னி பட்டதாரிகளின் வேலையில்லா பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார் .
அதே போன்று முன்னர் பொருளாதார அமைச்சின் கீழ் பணியாற்றிய CRP உத்தியோகத்தர்களுக்கும் விரைவில் நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி வழங்கியுள்ளார் .
மேற்படி சந்திப்பின் போது வவுனியா மாவட்ட பட்ட தாரிகள் சங்க தலைவரும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் வடமாகாண இணைப்பாளருமாகிய ம. ஆனந்தராஜா மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் வவுனியா வடக்கு இணைப்பாளர்கள் பிரசாந்தன் ,சிவராஜன் வவுனியா நகர இணைப்பாளர்கள் சந்திரபிரகாஷ், பாலமுரளி பட்டதாரிகள் சங்க உபதலைவரும் செட்டிகுளம் பிரதேச இணைப்பாளருமான க .ரஜனிகாந்த், அன்டன் ஸ்ரீதரன் ,கஜன் ஆகியோரும் CRP இணைப்பாளர்களான தி. ரஜீவன் ,கே. பாலமுரளி ஆகியோரும் கலந்து கொண்டனர் .
மேற்படி சந்திப்பில் கொழும்பு பல்கலை கழக அரசியல்துறை விரிவுரையாளர் DR. அனீஸ் அவர்கள் கலந்து கொண்டு சமகால அரசியல் தொடர்பாகவும் உரையாற்றியிருந்தார்.