இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபையின் வவுனியாகிளையினால் நடாத்தப்படும் தொழிற்பயிற்சி நெறியில் பயிற்சி பெறும் மாணவர்களால் தொழிற்பயிற்சிநெறி தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலமொன்றை கடந்த 17.07.2015 வியாழக்கிழமை மாலை வவுனியாவின் பல்வேறு கிராமங்களில் பல்வேறு குழுக்களாகச்சென்று நடாத்தினர்
இதன்போது ஒலிபெருக்கியில் விழிப்புணர்வு குரல்களை மாணவர்கள் எழுப்பியதுடன் துண்டுபிரசுரங்களையும் விநியோகித்தனர்.