
வவுனியா பம்பைமடு பகுதியில் நேற்று(17.07.2015) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் நால்வர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள கோவில் திருவிழாவிற்கு முச்சக்கரவண்டியில் சென்றுகொண்டிருந்தவர்கள் மீது பம்பைமடு பகுதியில் இருந்து வந்த வான் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்தில் இ.ஜானகி என்பவர் பலியானதுடன் வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ஆசிரியையான விக்னேஸ்வரி மற்றும் அவரது மகன் உட்பட மேலும் இருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





