கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து இந்த கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சாந்தபுரத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இராசலிங்கம் காந்தரூபன் என்பவரே உயிரிழந்துள்ளதாகவும், இந்த சம்பவம் தொடர்பில் அவரது சகோதரரும், மைத்துனரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






