தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் இன்று (18.07.2015) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் வாகனமே விபத்திற்குள்ளாகியுள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து கழிவுகளை நிரப்பிக் கொண்டு தள்ளாடி வீதியூடாக சென்று கொண்டிருந்த குறித்த வாகனம், தள்ளாடி-திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் வேகக் கட்டுப்பட்டை இழந்து வீதியைவிட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில், குறித்த வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மன்னார் வீதி போக்குவரத்துப்பிரிவு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






