11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!

589

Abuse

11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 63 வயதான ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கல்பிடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்பிடி – ஆந்தன்கந்நிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த சிறுமி எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை சம்பவம் இடம்பெற்ற போது சந்தேகநபர் அதிக போதையில் இருந்ததாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

தனது வீட்டில் இருந்து உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையே சிறுமி கடத்தப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இவர் தற்போது சிகிச்சைகளுக்காக கல்பிடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.