666 சிங்கள மக்களுக்கு ஒரு இராணுவமும் 6 தமிழ் மக்களுக்கு ஒரு இராணுவமும் : வவுனியாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன்!!(படங்கள், காணொளி)

291

நேற்று (19.07.2015) காலை வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பின்வருமாறு தெரிவித்தார்..

எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாக சில விடயங்களை சொல்லியிருக்கின்றோம். தமிழருக்கு வடக்கு-கிழக்கு இணைந்த தீர்வுத்திட்டம் முக்கியமானது.

தமிழ் மக்களுக்கு உரித்தான இறையான்மை என்ற அடிப்படையில் அந்த இறையான்மையில் இருக்கக்கூடிய சுயநிர்ணய உரிமை அடிப்படையில் வடக்கு-கிழக்கு இணைந்த தமிழ் மக்களுக்கு சுயாட்சியை வழங்க வேண்டும்.

அந்த சுயாட்சி சகல அதிகாரமும் கொண்ட கல்வி, வேலைவாய்ப்பு, அபிவிருத்தி, தமிழ் மக்களின் சுயாட்சியை கையாளக்கூடிய பிரதேசம். ஒரு சுயாட்சி பிரதேசம் அல்லது சுயாட்சி அரசை உருவாக்குவது என்பது தழிழ் மக்களுடைய, தழிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை.

தந்தை செல்வா சொன்னதை நடைமுறைப் படுத்துவதற்காகவே இந்த ஆயுதப் போராட்டம் பல்வேறுபட்ட குழுக்காளால் முன்வைக்கப்பட்டது. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டிக்கலாம். ஆனால் தமிழ் மக்களின் மனதில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

மகிந்த ராஜபக்சவை பொறுத்தவரை யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் நேற்று அனுராதபுரத்தில், வடக்கு- கிழக்கில் இன்னமும் வன்முறைப் பிரதேசமாகத்தான் இருக்கிறது என்று சொல்கின்றார்.

வடக்கு-கிழக்கில் எந்த வன்முறையும் இல்லை பயப்படவேண்டியது எதுவும் இல்லை என்று பொலிஸ் பேச்சாளர் சொல்கிறார்.

வடக்கு- கிழக்கில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் மகிந்த ராஜபக்ச கூறுகிறார் இப்படித்தான் முன்னும் இருந்தது, வடக்கு- கிழக்கில் வன்முறை வரப்போகின்றது என்று.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியானாலும் பிரதமரானாலும் இந்த நாட்டு தமிழ் மக்களின் மக்களின் நிலமை என்ன? நாங்கள் 10 இலட்சம் தமிழ் மக்கள் இருக்கின்றோம். ஒன்றரை இலட்சம் இராணுவத்தினர் தமிழ் மக்களின் பிரதேசங்களில் இருக்கின்றார்கள்.

இலங்கையில் மொத்தமாக இரண்டு இலட்சம் இராணுவத்தினர்தான் இருக்கின்றார்கள். இந்த வகையில் ஆறு தமிழருக்கு ஒரு இராணுவத்தினர் இருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் மட்டும் 20 ஆயிரம் இராணுவத்தினர் இருக்கிறார்கள். ஏனைய ஏழு மாகாணங்களில் மொத்தமாக 30 ஆயிரம் இராணுவத்தினர் மட்டுமே இருக்கின்றார்கள்.

666 சிங்கள மக்களுக்கு ஒரு இராணுவமும், 6 தமிழ் மக்களுக்கு ஒரு இராணுவமும் இருக்கின்றது. இதிலிருந்து தெரிகின்றது வடக்கு-கிழக்கில் எந்தளவு இராணுவ அடக்குமுறை இருக்கிறது என்பது.

தமிழ் மக்களின் 67 000 ஏக்கர் காணிகளை இராணுவத்தினர் அபகரித்து, அக் காணிகளில் வயல் மற்றும் தோட்டம், ஹேட்டல், இராணுவ முகாம் என்பவற்றை கட்டி அவர்கள் சுபபோகம் அனுபவிக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

-பிராந்திய செய்தியாளர்-

 

P1170892 P1170893 P1170894 SAMSUNG CAMERA PICTURES