தமிழ்த் தேசியத்தை நாம் நேசிக்காவிட்டால் பாரிய பின்னடைவை நோக்கித் தள்ளப்படுவோம் : வைத்திய கலாநிதி சி.சிவமோகன்!!(காணொளி)

957

P1170891

நேற்று(19.07.2015) காலை வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டமைப்பின் வேட்பாளர் சி.சிவமோகன் இவ்வாறு தெரிவித்தார் தொடர்ந்து அவர் உரையாற்றும் போது..

எமது தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டிய தேவையுள்ளது. தமிழர் விடுதலைக்காக எமது மூச்சை நாம் ஜ.நா சபை வரை எடுத்துச் செல்லவதற்காக இவ்வளவு தியாகங்களைச் செய்துவிட்டு விடுதலை என்ற மூச்சை முன்னின்று நடாத்திய தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று இல்லாமல் இருக்கின்றபோது சரியான தலைமைத்துவத்தின் கீழ் அந்தத் தமிழருக்கான விடுதலையை எடுத்தச் செல்ல வேண்டிய தேவை மக்கள்ஆகிய உங்களுக்கு இருக்கிறது.

எனவே இந்த மக்கள் ஒரு சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கப்பட வேண்டியிருக்கிறார்கள். தமது தேசியத்தை 100 வீதம் நேசிப்பவரை ஆதரிக்கவேண்டிய கட்டத்தில் தமிழர்கள் இருக்கிறார்கள்.

தமிழ்த் தேசியத்தை நாம் நேசிக்காவிட்டால் பாரிய பின்னடைவை நோக்கித் தள்ளப்படுவோம். தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டார்கள். புதிய அரசாங்கம் வந்தபோதும் எம் மீது அடக்குமுறைகள் இரகசியமான முறையில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.

ஒருசில சுதந்திரம் மட்டுமே கிடைத்தது. இப்படியான கூட்டங்களை செய்வதற்கு இந்தத் தேர்தலில் தாம் வெல்லமாட்டோம் என்று தெரிந்தும் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்காக ஒருசில வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.
.
-பிராந்திய செய்தியாளர்-