வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதவன்!!

246

Mathavan

வேட்டை படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த மாதவன் இறுதிச்சுற்று படம் மூலம் தமிழில் மீண்டும் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் மாதவன் குத்துச் சண்டைப் பயிற்சியாளராக வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது வெளியிடத் தயாராகி வருகிறது.

இந்நிலையில் கமல் நடிப்பில் தற்போது உருவாகி வரும் தூங்காவனம் படத்தில் மாதவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானது.

ஏற்கனவே கமல் நடிப்பில் வெளியான மன்மதன் அம்பு, அன்பே சிவம், நளதமயந்தி ஆகிய படங்களில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார். ஆதலால் இப்படத்திலும் நடிக்கிறார் என்று செய்திகள் பரவின. ஆனால் இதனை மாதவன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து மாதவன் கூறும்போது, தூங்காவனம் படத்தில் நடிக்க கேட்டு யாரும் என்னை அணுகவில்லை. வில்லன் வேடங்களில் நடிக்க தனக்கு ஆர்வம் இல்லை என்றும் கூறியுள்ளார்.