
தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளுடன் எப்போதும் நெருக்கமாக பழகக் கூடியவர் நடிகர் ஆர்யா. இதனாலேயே, ஆர்யாவையும், இவருடன் நடிக்கும் நடிகைகளையும் இணைத்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கும். தமிழ் சினிமாவிலேயே நடிகைகளுடன் இணைத்து அதிகம் கிசுகிசுக்கப்பட்டவர் பட்டியலில் ஆர்யாவுக்குதான் முதலிடம்.
இதனாலேயே, இவரது பெற்றோர் இவருக்கு விரைவில் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி, இவருக்கு பெண் தேடும் படலம் நடத்திக் கொண்டிருப்பதாக ஒரு பேச்சு அடிபடுகிறது.
இந்நிலையில், தனது திருமணம் குறித்து ஆர்யா வெளிப்படையாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, என்னுடைய திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம்தான். ஏதோ, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு பெண்ணை நான் மணம் செய்துகொள்ள மாட்டேன். எனது மனதுக்கு பிடித்தமான பெண்ணை, எவ்வளவு நாளானலும் தேடிக் கண்டுபிடித்து, பிறகு அவரை காதலித்து, அதன்பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார்.





