வவுனியாவிலிருந்து எழுப்பட்ட கேள்விகளின் எதிரொலி !தேர்தல் காலத்தில் மின்னல் நிகழ்ச்சி நடத்த தடையுத்தரவு !

339

sddefault

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சிறிரங்கா சக்தி தொலைக்காட்சியில் நடத்தும் மின்னல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார்.

அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து  கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளரிடம்  வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள்   தேர்தல் காலத்தில்  அரசியல்வாதிளை முட்டி மோதவிடும் எண்ணத்தில் வடிவமைக்கபட்டுள்ள மின்னல் நிகழ்வு ஒளிபரப்பபடுவது  அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களின்  மத்தியிலும் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் தேவையற்ற இடைவெளிகளையும் வன்முறைஉணர்வுகளையும் நிச்சயம் தோற்று விக்கும்   என சுட்டிக்கட்டியிருந்தனர் .

 சமகால அரசியல் தொடர்பான அக்கலந்துரையாடலில் பட்டதாரிகளால் எழுப்பபட்ட கேள்விகளை தான் தேர்தல் ஆணையாளரின் கவனத்துக்கு கொண்டு வருவதாக    அகில இலங்கை மக்கள் காங்கிரசின்  அரசியல் ஆலோசகரும்   கொழும்பு பல்கலைகழக அரசியல் விஞ்ஞானம் பேராசிரியருமான DR,  அனீஸ் அவர்கள்  தெரிவித்திருந்தார் . அதனடிப்படையில்  மேற்படி விடயத்தை தேர்தல் ஆணையாளர் கவனத்துக்கு கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.    அதன்படி தேர்தல் காலத்தில் மின்னல் நிகழ்ச்சியை தடைசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஓர் அரசியல் கட்சி ஒன்றின் பொதுச் செயலாளர் மற்றும் கட்சி ஒன்றினால் தேசிய பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டவர் எவ்வாறு அரசியல் விவாத நிகழ்ச்சியை நடத்த முடியும் என கேள்வியும் வவுனியா மாவட்ட பட்டதாரிகள்  சங்கத்தினரால்  எழுப்பட்டிருந்தது..

ஒவ்வொரு தேர்தலின் போதும் ரிசாட் பதியூதின் தலைமையினலான அவரது கட்சி தன்னுடைய நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக இதன்போது சிறிரங்கா கூறியுள்ளார்.

தேர்தல் முடிவடையும்வரை மின்னல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப தேர்தல் ஆணையாாளர் தடைவிதித்தார். அத்துடன் முன்னர் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ரங்கா அனுமதி கோரினார்.

பிரதி தேர்தல்கள் ஆணையாளர் பார்வையிட்டு ஒப்புதல் அளித்த பின்னர் முன்னர் பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனுமதி வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.
இதே வேளை அண்மையில் மலையகம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட மின்னல் நிகழ்சியின் ஒளிப்பதிவு இணையங்களில் வெளியாகி இருந்தது.

மலையக அரசியல்வாதி ஒருவருக்கு என்ன பேச வேண்டும் என்பதை, சிறிரங்கா சொல்லிக் கொடுப்பதுடன் எவ்வாறான தொலைபேசி இணைப்புக்களை இணைக்க வேண்டும் என கூறும் ஒலிப்பதிவு ஒன்று வெளியாகியது.

இவ்வாறு அக் கட்சிக்கு ஆதரவாக திறைமறைவில் செயற்படுவது குறித்த ஒலிப்பதிவு வெளியானவுடன் மின்னல் நிகழ்ச்சி குறித்து எதிர்மறையான பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மின்னல் நிகழ்ச்சி ஒரு அரசியல் நாடகம் என்றும் அரசியலில் ஈடுபடும் ஒருவர் தனக்காக செய்யும் நாடகம் என்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புக்கள் வலுத்துள்ளன.

இந்த நிலையிலேயே மின்னல் நிகழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணையாளர் தற்காலிகமாக தடை வித்துள்ளதாக தெரியவருகிறது..