சுவிஸ்லாந்தில் புகலிடம் கோருவோர் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

524

switzerland

சுவிஸ்லாந்தில் புகலிடம் கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 06 மாத காலங்களில் 11000 பேருக்கும் அதிகமானோர் சுவிஸ்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.

அதே காலத்தில் சுமார் 840 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 06 மாத காலத்திற்குள் எரித்திரியாவிலிருந்தே அதிகளவான 3800 புகலிடம் கோரிய விண்ணப்பங்கள் கிடைத்திருக்கின்றன.

இந்தநிலையில் கடந்த 06 மாத காலத்தில் இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டையும் விட 76.5 வீதமாக அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.