இலங்கை – பாகிஸ்தான் போட்டியை காணச் செல்லும் இரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள்!!

466

SL

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது.

இந்தப் போட்டியை பார்வையிட வரும் இரசிகர்கள் எவரும் மதுபானம், கிளாஸ், போத்தல்கள் மற்றும் கூர்மையான ​பொருட்கள் எதனையும் எடுத்து வர இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தடை விதித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில், இடம்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது, எல்லைக் கோட்டுக்கு உள்ளே கல் ஒன்று எறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு சிறுது நேரம் குழப்ப நிலை ஏற்பட்டது.

இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் செயலாளர் பிரகாஸ் பாஸ்டர், இரசிகர்கள் குழுக்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலை அடுத்து பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததாக குறிப்பிட்டார்.

மேலும் அந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.