சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் இலங்கை இளைஞர் பலி!!

578

Dead

சவுதி அரேபிய தலை நகர் ரியாத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை தூரகம் தெரிவிக்கையில்,

கொழும்பை சேர்ந்த 28 வயதான ரிஸ்வான் மொஹமட் ஹில்மி என்ற இளைஞரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

ரியாத்தில் விற்பனையாளராக பணிப்புரிந்து வந்துள்ளதாகவும், இவர் ஓட்டிச் சென்ற கார் மற்றுமொரு காருடன் மோதியத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமை நடந்த இந்த விபத்தில் மற்றைய காரில் இருந்த சாரதி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் அவரும் ஆசிய நாட்டவரே.

ரிஸ்வான் தனது காரை வேகமாக செலுத்தி சென்றுள்ளார். இதன் காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றன.

திருமணமாக ரிஸ்வானுக்கு அண்மையில் கொழும்பில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.