நவீன பறக்கும் கார் அறிமுகம்!!

496

Flying car

சாதா­ரண கார் தரிப்­பி­டத்தில் நிறுத்தக் கூடிய நவீன பறக்கும் கார் ஒன்று அமெ­ரிக்க விஸ்­கொன்ஸின் மாநி­லத்­தி­லுள்ள ஒஷ்கொஷ் நகரில் இடம்­பெற்ற வரு­டாந்த பரீட்­சார்த்த வானூர்தி சங்க நிகழ்வில் அறி­முகப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டது.

ரி.எப்.- எக்ஸ் என அழைக்­கப்­படும் இந்த பறக்கும் காரா­னது தரையில் மணிக்கு 200 மைல் வேகத்­திலும் வானில் மணிக்கு 500 மைல் வேகத்­திலும் பய­ணிக்கும் வல்­ல­மையைக் கொண்­டது.

இந்த 4 பேர் பய­ணிக்கக் கூடிய கார் சார­தி­யாலும் கணினி மூலம் தன்­னி­யக்க ரீதி­யிலும் செயற்­ப­டுத்தக் கூடி­ய­தாகும்.

இதன் கார­ண­மாக இந்தக் காரில் பய­ணிப்­ப­வர்கள் செல்ல வேண்­டிய பிராந்­தி­யத்தை கணி­னியில் பதிவு செய்யும் போது அது குறிப்­பிட்ட இடம் பறக்கும் காரை தரை­யி­றக்­கு­வ­தற்கு உகந்த இட­மாக அமை­யா­விடில் தரை­யி­றக்­கு­வ­தற்கு வேறு இடத்தைத் தெரிவு செய்­வ­தற்கு கோரும்.

எனினும் இந்தக் காரை நடை­முறைப் பயன்­பாட்­டிற்கு உகந்­த­தாக மேம்­ப­டுத்­து­வ­தற்கு இன்னும் 8 முதல் 12 வரு­டங்கள் செல்­லலாம் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.இந்தக் காரை 183,000 ஸ்ரேலிங் பவுண் வரையான விலைக்கு விற்பனைக்கு விட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.