வவுனியாவில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்பு!!(படங்கள்)

549

வவுனியா தோணிக்கல் ஆலடியில் பூட்டிய கடை ஒன்றிக்கு முன்னால் முதியவர் ஒருவர் நேற்று மாலை (23.07.2015) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..

குறித்த முதியவர் நேற்று காலை வவுனியா பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சென்றுவிட்டு வீடு திரும்பியதாகவும், கடைக்கு முன்னால் உறங்கிய அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் கருப்பன்குமாரன் என்ற 72 முதியவராவார். இச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-பிராந்திய செய்தியாளர்-

SAM_0839 SAM_0841 SAM_0842 SAM_0847 SAM_0848