ரத்தம் குடிக்க வேண்டுமா என்னிடம் வாருங்கள் என அழைக்கும் பெண்!!(வீடியோ)

554

மெக்சிகோ நாட்டில் பெண் ஒருவர் ரத்தம் குடிப்பவர்களுக்காக தனது ரத்தத்தை தானமாக வழங்கிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் லூசியானாவில் உள்ள ஸ்டிரீவ்போர்ட் பகுதியை சேர்ந்தவர் புளுட் கெட்சன். இவர் ரத்தம் குடிப்பவர்கள் தாராளமாக தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று அழைப்புவிடுத்துள்ளார். மேலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பலருக்கும் ரத்தம் வழங்கியுள்ளார்.

இது குறித்து புளுட் கூறியதாவது, நான் சிறு வயதில் எனது சகோதரியின் அலமாரியில் ரத்தக்காட்டேரி சம்பந்தமான புத்தகத்தை பார்த்தேன்.

பின்னர் அதைப் படிக்கத் தொடங்கினேன். அப்போதிலிருந்தே ரத்தக்காட்டேரிகள் வாழ்க்கையை புரிந்துகொள்ள தொடங்கின்னேன் என்று தெரிவித்துள்ளார்.

தற்போது அவர் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த மிச்செல் வாச்மில் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தித்ததாகவும். அவருக்கு தேவையான நேரத்தில் ரத்தத்தை பருகத் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ரத்தத்தை தெரியாதவர்களுக்கு வழங்கக்கூடாது என்றும் ரத்தம் தரும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

L1 L2