வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையுடன் போராடி மகளை காப்பாற்றிய வீரத்தாய்!!

398

Tiger

ராஜஸ்தான் மாநிலத்தில் தாய் ஒருவர், வீட்டிற்குள் புகுந்த சிறுத்தையுடன் போராடி தனது இரண்டு மாத குழந்தையை காப்பாற்றியுள்ளார்.

உதய்பூரில் இருந்து 60 கி.மீ. தூரத்தில் காட்டுப்பகுதியில் உள்ள தகல்பலா கிராமத்தை சேர்ந்த சதன் (25) என்ற பெண், பிறந்து 2 மாதங்களே ஆன தனது பெண் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், அப்போது எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று வீட்டுக்குள் புகுந்து, குழந்தையை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.

சிறுத்தை குழந்தையை கவ்வி இழுத்து செல்ல முயன்றபோது, சதன் சிறுத்தையுடன் மண் வெட்டி மற்றும் இரும்பு கம்பியுடன் 30 நிமிடம் போராடியுள்ளார்.

சதனின் சத்தம் கேட்டு உறவினர்கள் வீட்டிற்குள் ஓடி வந்த போது, குழந்தையை விட்டு விட்டு சிறுத்தை காட்டுக்குள் ஓடிவிட்டது.

சதனின் காலில் பலத்த காயம் ஏற்பட்டதால், சதனின் உறவினர்கள் அவரை உடனடியாக உதய்பூர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சதனிற்கு 15 தையல்கள் போடபட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு 20 நிமிடங்கள் கழித்து மீண்டும் அதே இடத்திற்கு வந்த சிறுத்தையை பொது மக்கள் ஆயுதங்களால் விரட்டியுள்ளனர்.

பின்னர் உள்ளூர் வேட்டைக்காரர் சத்னம் சிங் உதவியுடன் அந்த சிறுத்தை 4 மணி நேர தேடுதலுக்கு பிறகு பிடிக்கப்பட்டு, உதய்பூர் வனவிலங்கு சரணாலயத்தில் ஒப்படைக்கபட்டது.