அதிகளவு நேரம் பேஸ்புக் பயன்படுத்துவோருக்கு மனநலம் பாதிக்கும் அபாயம்!!

341

FB

பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களை அதிக நேரம் பயன்படுத்தினால் மனநிலை பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

கனடாவைச் சேர்ந்த சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக அந்த நிறுவனம் இளைஞர்களிடையே ஆய்வு நடத்தியது. அப்போது 25 சதவிகித மாணவர்கள் நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கும் அதிகமாக பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தியது தெரியவந்தது.

தங்களின் தீராத மனக்குறைகளை தீர்ப்பதற்காக இளைஞர்கள் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக சமூக வளைத்தளங்களை பயன்படுத்தினால் நாளடைவில் அதுவே மனநோயாக மாறக்கூடிய அபாயம் இருப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சைபர் சைக்கொலஜி என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது.