முதல் முறையாக நான்கு கால்களைக் கொண்ட பாம்பின் எலும்புப் படிமம் கண்டுபிடிப்பு!!

253

பிரேசிலில் நான்கு கால்களைக் கொண்ட பாம்பு ஒன்றின் எலும்புப் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

11 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாகக் கூறப்படும் இந்தப் பாம்பு, நான்கு கால்களுடன் கண்டறியப்பட்ட முதல் பாம்பு வகை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம், பாம்பு இனங்கள் கடல்வாழ் உயிரினங்களிலிருந்து உருவானவை அல்ல, அவை பல்லி இனங்களின் பரிணாம வளர்ச்சிதான் என்பது உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர். இதுகுறித்து பிரிட்டனின் ஆய்வாளர் டேவ் மார்ட்டில் கூறியதாவது:

பாம்புகள், பல்லி இனத்தின் பரிணாம வளர்ச்சியில் உருவானவை என விஞ்ஞானிகள் பல காலமாகக் கூறி வருகின்றனர். எனினும், அவை எந்தக் காலகட்டத்தில் பல்லியிலிருந்து பாம்பாக மாறின; எந்தப் பல்லியினத்தின் பரிணாம வளர்ச்சியில் அவை உருவாகின போன்ற விவரங்கள் இதுவரை பெரும் புதிராக இருந்து வந்தது. இந்த நிலையில், பிரேசிலில் கண்டெடுக்கப்பட்டுள்ள நான்கு கால் பாம்பின் எலும்புப் படிமம் இந்தப் புதிருக்கு விடையளித்துள்ளது, என்றார் அவர்.

1 2 3