அரசியலுக்கு எப்போதும் வரமாட்டேன் : திரிஷா!!

422

Trisha

சமீபகாலமாக நடிகைகள் அரசியலுக்கு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ராதிகா, குஷ்பு, ரோஜா, விந்தியா, ஜெயப்பிரதா, ஜெயசுதா, குயிலி, குத்து ரம்யா, விஜயசாந்தி, ஹேமமாலினி என பலர் கட்சிகளில் இணைந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் திரிஷாவும் அரசியலில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியானது. அதை திரிஷா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது,

‘‘நான் அரசியலில் ஈடுபட இருப்பதாக தவறான செய்திகள் பரவியுள்ளது. நான் அரசியலில் ஈடுபட மாட்டேன். இப்போது மட்டும் அல்ல எப்போதும் அரசியலுக்கு வர மாட்டேன்’’ என்றார்.

திரிஷா தற்போது கமலுடன் இணைந்து தூங்காவனம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமலின் உதவியாளர் இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது.