வவுனியாவில் பேரூந்தின் மீது கல்வீச்சு!!(படங்கள்)

733

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்தின் மீது நேற்று இரவு (25.07) கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் கொழும்பு சாலைக்கு சொந்தமான பேரூந்தின் மீதே இரவு 9 மணியளவில் கல்வீசப்பட்டுள்ளது.

இராணுவ உணவகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இச் சம்பவத்தில் பேரூந்தின் சாரதியான அஜித்குமார என்பவர் தலையில் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் பேரூந்தில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் வேறு ஓர் பேரூந்தியில் கொழும்பு நோக்கி செல்ல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.

-பிராந்திய செய்தியாளர்-

DSC_0063 DSC_0068