பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க நடவடிக்கை!!

448

DEP

இலங்கையில் கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சை நடைபெற முன்னர் வினாத்தாள்கள் வெளியாவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனடிப்படையில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் செப்டெம்பர் 8ம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் பகிர்தல் நடவடிக்கைகளுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே கடந்த வருடங்களில் பிரத்தியேக வகுப்புகளில் வைத்தே பரீட்சைக்கு முன்னர் வினாத்தாள்கள் வெளியாகியமை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.