கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்!!

645

3 years girl

கிளிநொச்சி – எள்ளுக்காடு பகுதியில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்தச் சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, குறித்த சிறுவன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான 14 வயது சிறுவனிடம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொள்வதற்காக அவரைத் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் 3 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குறித்த சிறுவன் ஒப்புக்கொண்டுள்ளார்.

எனினும், சட்ட மருத்துவ அறிக்கை இன்னும் கிடைக்கப்பெறவில்லை என பொலிஸார் குறிப்பிட்டனர்.

கடந்த ஜூன் மாதம் காணாமல் போன 3 வயது சிறுமியுடையது என சந்தேகிக்கப்படும் எச்சங்கள் கடந்த 19 ஆம் திகதி பிற்பகல் எள்ளுக்காடு பகுதியில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.