மேற்கிந்திய தீவு பாகிஸ்தான் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி சமநிலையில் முடிவடைந்தது..

395

Pakistan-vs-West-Indies

மேற்கிந்திய தீவு சென்றுள்ள பாகிஸ்தான் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற தொடர் 1-1 என சமநிலை வகித்தது. மூன்றாவது போட்டி சென்ட் லூசியாவில் நடந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவு அணித் தலைவர் டுவைன் பிராவோ களத்தடுப்பை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பாக மிஸ்பா 75 ஓட்டங்களையும் உமர் அக்மல் 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். மேற்கிந்திய தீவு சார்பில் ஜாசன் ஹோல்டர், டுவைன் பிராவோ தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க சாமுவேல்ஸ் 46 ஒட்டங்களையும், சிம்மன்ஸ் 75 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பின்வரிசை விக்கட்டுகள் சொற்ப ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட மேற்கிந்திய தீவு அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 229 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது.

பாகிஸ்தான் அணி சார்பில் சயீத் அஜ்மல், ஜுனைத் கான் தலா 3, விக்கட்டுகளையும் முகமது இர்பான் 2, வாகாப் ரியாஸ் ஒரு விக்கற்றையும் வீழ்த்தின

இதன் மூலம் போட்டி சமநிலையில் முடிந்தது. தொடர் 1-1 என மீண்டும் சமநிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானின் மிஸ்பா, மேற்கிந்திய தீவின் சிம்மன்ஸ் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். இவ்விரு அணிகளுக்கு இடையிலான நான்காவது போட்டி சென்ட் லூசியாவில் நாளை நடக்கிறது.