வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று(27.07.2015) மதியம் 1 மணியளவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் பற்றிமேலும் தெரியவருவதாவது..
இன்று மதியம் 1 மணியளவில் வேகமாகவந்த மோட்டார் சைக்கிள் தபால் நிலையத்தில் இருந்து வீதிக்கு இறங்கிய முச்சக்கரவண்டி மீது மோதியதில் மோட்டர் சைக்கிளை செலுத்தியவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்துப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
-பிராந்திய செய்தியாளர்-






