மறைந்த முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீரஞ்சலி நிகழ்வு ஒன்று இன்று (30.07.2015) காலை 9 மணியளவில் வவுனியாவில் நடைபெற்றது.
ADAT கணணி நிறுவனத்தின் ஏற்பாட்டில் புகையிரதநிலைய வீதி, வைரவப்புளியங்குளத்தில் பெஞ்சமின் டிஷான் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் குலசிங்கம் திலீபன் உட்பட இளைஞர்கள் பலர் கலந்து அப்துல் கலாம் அவர்களுக்கு கண்ணீரஞ்சலி செலுத்தினர்.






