புதிய பரிணாமத்தில் Google Translate அப்பிளிக்கேஷன்!!

555

GoogleTranslate-1jawf0aகூகுள் நிறுவனத்தினால் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சேவைகளுள் Google Translate சேவையும் ஒன்றாகும்.பயனுள்ள இச் சேவையினை மொபைல் சாதனங்களில் பெற்றுக்கொள்வதற்காக அப்பிளிக்கேஷன்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போது 27 வரையான மொழிகளை பயன்படுத்தக்கூடிய வசதியினை உள்ளடக்கியதாக புதிய பதிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

முன்னர் இந்த அப்பிளிக்கேஷனில் 7 மொழிகளை பயன்படுத்தும் வசதியே உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கூகுளின் அன்ரோயிட், அப்பிளின் iOS சாதனங்களுக்காக வெளியிடப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனில் English, French, German, Italian, Portuguese, Russian, Spanish, Bulgarian, Catalan, Croatian, Czech, Danish, Dutch, Filipino, Finnish, Hungarian, Indonesian, Lithuanian, Norwegian, Polish, Romanian, Slovak, Swedish, Turkish மற்றும் Ukrainian ஆகிய மொழிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.