உலகக்கிண்ணம் வென்ற இலங்கை அணிக்காக கொழும்பில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம்!!

412

Cricket tower Sri Lanka

உலகக்கிண்ணம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த இலங்கை அணியை கௌரவிக்கும் விதமாக கொழும்பில் பிரம்மாண்ட கிரிக்கெட் கோபுரம் கட்டப்படுகிறது.

கடந்த 1996ம் ஆண்டு அர்ஜூன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி உலகக்கிண்ணம் வென்று அனைவரையும் வியக்க வைத்தது.

இலங்கை அணியின் இந்த சாதனையை நினைப்படுத்தும் விதமாக ஸ்ரீபதி எடிபோர்ஸ் என்ற இந்திய கட்டுமான நிறுவனம் 330 மில்லியன் செலவில் கொழும்புவில் மிகப் பிரம்மாண்டமான கிரிக்கெட் கோபுரத்தை கட்டுகிறது.

இது தான் இலங்கையிலே மிகப் பெரிய கட்டிடமாக இருக்கும் என்றும் அந்த கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் வடிவம் சுற்றிலும் பேட்டையும், மேற்புறத்தில் பந்தையும் கொண்டதாக இருக்கும். 96 அடுக்குகளை கொண்ட இந்த கோபுரம் 363 மீற்றம் உயரம் கொண்டது.

376 வசிக்கும் அறைகளை கொண்ட இந்த கோபுரத்தில் பொழுதுபோக்கு மையம், வணிக வளாகம், நீச்சல் குளம், உடற்பயிற்சி சாலை, யோகா மையம் என அனைத்து வசதிகளும் கொண்டதாக கட்டப்படுகிறது.

2 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாகும் இந்த கோபுரம் இலங்கை முதலீட்டு சபையுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்தானதை தொடர்ந்து, 48 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.