இளநரையை போக்கும் நெல்லிக்காய் எண்ணெய்!!

723

29நெல்லிக்காயை அரைத்துத் தலை முழுகி வரக் கண்களின் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியுண்டாகும். 750 கிராம் அளவு நெல்லிக்காயை எடுத்து ஒவ்வொரு காயிலும் கூர்மையான பெரிய ஊசியைக் கொண்டு பல துளைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு லிட்டர் அளவு தேங்காய் எண்ணெயில் துவாரம் செய்யப்பட்ட நெல்லிக் காய்களைச் சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு பத்து நாட்களேனும் சூரிய வெயிலில் வைத்திருந்து எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு அன்றாடம் தேய்த்து வர (தலை முடியின் வேர்ப்பகுதியை தொடும்படியாக) இளநரை என்னும் இளைஞம் தலைமுறையினருக்கு வரும் வெள்ளை முடி தவிர்க்கப் பெறும்.
நெல்லிக்காய் எண்ணெய் இளநரையும் குணமாக்கும் . தலைமுடி கொட்டுவது தவிர்க்கப்படும். தலைமுடி மென்மையாகவும் விளங்கும். கண்களில் எரிச்சலும் தணிந்து குளிர்ச்சியும் பார்வைக் கூர்மையும் உண்டாகும். அரைக் கோப்பை நெல்லி சாறு எடுத்து அதனோடு சம அளவு எலுமிச்சை சாறு சேர்த்து போதிய அளவு நீர் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளிப்பதனால் தலைமுடியில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுபிசுப்பு குணமாவதோடு தலைமுடி மென்மையாகவும் பட்டு போலவும் தென்படும்.