மழை நாள்..

1138


Malai

வானம் கிழிந்து போனது
வீதிகளை மேவி வெள்ளம்
வீடுகளில் முட்டியது
மரமெல்லரம் பாறி
நிலமெல்லாம் நீர் கசிவாய்
சிதம்பியது..



கடும் குளிரை
இதம் செய்த உன்
முதற்பார்வை என்னுள் உரசியது
சுகமாக..

காலப் புயலொன்று
கடுகதியில் வீசியதால்
இலையுதிர் காலத்து சருகை போல்
எங்கோ விசிறப்பட்டு கிடக்கிறது
எம் உறவு..



இருந்தும்
அன்பு மட்டும்இன்னும் இன்னும்
கசிந்து கொண்டேயிருக்கின்றது
முன்னைய மழை நாளைப்போல்.



மித்யா -கானவி.