பிரம்மாண்ட குடை தயாரிப்பில் இந்தியாவின் கின்னஸ் சாதனையை முறியடித்த சீனா!!

488

Fake-Umbrella

மிகப்பெரிய குடை தயாரிப்பில் இந்தியாவின் உலக சாதனையை முறியடித்த சீனா, புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு குடை தயாரிப்பு நிறுவனம், 23 மீட்டர் விட்டம், 14.4 மீட்டர் உயரத்தில் பிரமாண்டமான குடையை தயாரித்து அறிமுகம் செய்தது. சுமார் 5700 கிலோ எடையுடன், 418 சதுர மீட்டர் பரப்பளவை மறைக்கும் அளவுக்கு பிரமாண்டமாக இருந்தது. இதற்கு கின்னஸ் அமைப்பின் சீன பிரதிநிதிகள் பரிந்துரை செய்து சான்றிதழ் அளித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.

இதற்கு முன், இந்தியாவில் 17.06 மீட்டர் விட்டம், 10.97 மீட்டர் உயரத்தில் 2010ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட குடைதான் இதுவரை உலக சாதனையாக இருந்தது. இந்த குடை 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் திகதி  புனேயில் ஒரு வணிக வளாகத்தில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.