உயிரினங்கள் வாழ தகுதியுடன் பூமியை போன்று 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு!!

366

Earth_(orbit)பூமியை போன்று உயிரினங்கள் வாழ தகுதி படைத்த கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஸ்பெயினில் உள்ள ஒரு தீவில் அமைக்கப்பட்டுள்ள ஹார்ப்ஸ் என்ற அதிநவீன டெலஸ்கோப் மூலம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் மூலம் 3 புதிய கிரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சூரியனை பூமி உள்ளிட்ட கிரங்கள் சுற்றி வருவதை போன்று இந்த 3 கிரகங்களும் ஒரு நட்சத்திரத்தை நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன.

இந்த 3 புதிய கிரகங்களும் பூமியை போன்றே உயிரினங்கள் வாழும் தகுதி படைத்த நிலையில் காற்று மற்றும் நீருடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியில் இருந்து 21 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இவை உள்ளன.

இவற்றுக்கு ‘எச்.டி. 219134’ என பெயரிட்டுள்ளனர். பூமியை போன்றே இவற்றின் மேற்பரப்பும் அடர்த்தியுடன் காணப்படுகிறது. மிகுந்த வெளிச்சத்துடன் கூடிய இக்கிரகங்களை இரவில் வெறுங்கண்ணால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.